மாணவிகளுக்கு எதிரான பாலியல் வழக்கில் சித்திரதுர்கா மடாதிபதி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சித்திரதுர்காவில் உள்ள முருக மடத்தின் மடாதிபதியாக சிவமூர்த்தி முருகா சரணரு என்பவர் இருந்து வருகின்றார். இவர் மீது மடத்தின் பள்ளியில் தங்கி படித்த இரண்டு மாணவிகள் பாலியல் பலாத்கார புகார் அளித்திருக்கின்றனர். அந்த புகாரின் அடிப்படையில் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு உள்ளிட்ட ஐந்து பேர் மீது கடந்த 26ம் தேதி சித்திரதுர்கா போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு சித்ர துர்கா போலீசார் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட இரண்டு மாணவிகளும் சித்திர துர்கா மாவட்ட இரண்டாவது கூடுதல் மற்றும் செசன்சு கோர்ட்டில் ஆஜராகி வாக்கு மூலம் அளித்துள்ளனர். இதற்கிடையே கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கும் விதமாக மடாதிபதி சிவமூர்த்தி சார்பில் சித்த துர்கா கோர்ட்டில் முன்ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றுள்ளது அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி முன்ஜாமின் மதம் மீதான விசாரணையை இன்று ஒத்தி வைத்துள்ளார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் ஆஜராகும் வக்கீல் சீனிவாஸ் பேசும் போது மடாதிபதிக்கு முன் ஜாமின் கிடைக்காத விதமாக கோர்ட்டில் எனது வாதம் இருக்கும் என குறிப்பிட்டு இருக்கிறார். இதற்கு இடையே மடத்திற்கு சொந்தமான விடுதியில் தங்கி படித்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் வேறு விடுதிகளுக்கு மாற்றப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் மடாதிபதி மீதான பாலியல் புகார் பற்றி தேசிய குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்திருக்கிறது. மேலும் பாலியல் புகார் பற்றி கடந்த ஒரு வாரமாக என்ன விசாரணை நடைபெற்றது என்பது பற்றி விளக்கம் அளிக்கும்படி சித்ர துர்கா மாவட்ட போலீஸ் ராமுக்கு தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இதே போல் மாநில மகளிர் ஆணையம் பாலியல் புகார் குறித்து நடத்தப்பட்ட விசாரணை பற்றிய தகவலை வழங்கும் படி போலீஸ் சூப்பிரண்டுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய மடத்தின் அதிகாரி பசவராசன் அவரது மனைவி சௌபாக்கியா போன்ற ஜாமின் கேட்டு சித்ர துர்கா சீசன் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுக்களை நேற்று விசாரித்த கோர்ட் பசவராசன் சௌபாக்கியா போன்ற இருவருக்கும் ஜாமின் வழங்கி உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் சித்ர துர்கா போலீசார் முருக மடத்திற்கு சென்று மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரண்ருவை கைது செய்துள்ளனர். அதன் பின் அவரை காரில் ஏற்றி போலீசார் அழைத்து சென்றுள்ளனர். மடாதிபதி கைது செய்யப்பட்ட தகவலை அறிந்த பக்தர்கள் மடத்திற்கு வர தொடங்கியுள்ளனர். ஆனால் அங்கு பக்தர்களை போலீசார் அனுமதிக்காமல் துரத்தியுள்ளனர். இந்த நிலையில் கைதான மடாதிபதியை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக சித்ர துர்கா அரசு மருத்துவமனைக்கு அளித்து செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் போலீசார் அங்கு அழைத்து செல்லவில்லை அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. பாலியல் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆறு நாட்கள் ஆன நிலையில் நேற்று இரவு மடாதிபதி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.