Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்திய அரசை சொல்லாதீங்க…! வேதனைப்பட்ட எடப்பாடி…. தமிழக அரசுக்கு திடீர் அட்வைஸ் …!!

அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம், திரு ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கம் ஊடகத்தையும், பத்திரிக்கையும் நம்பி தான் இருக்கின்றது. மக்களெல்லாம் கைவிட்டுட்டார்கள். 15 மாத கால திமுக  ஆட்சியில மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கல.

இன்னைக்கு எங்க பாத்தாலும் கட்ட பஞ்சாயத்து, ரவுடிகள் ராஜ்ஜியம், செயின் பறிப்பு, போதை பொருள் விற்பனை.தமிழகம் போதை பொருள் நிறைந்த மாநிலமாக உருவாக்கிப் போய்விட்டது. அண்மையில் கூட இரண்டு நாளைக்கு முன்னாடி தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கிறார் மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் திரு.பொன்முடி அவர்கள்,  என்ன சொல்றாரு ?

போதை வருவதை மத்திய அரசாங்கம் கட்டுப்படுத்தல. வெளிமாநிலத்தில் இருந்து வருதுன்னு சொல்றாரு. ஏங்க தமிழ்நாட்டுல யார் இருக்கிறார் ? திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இருக்குது. காவல்துறை யார் கட்டுபட்டில் இருக்குது ? மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இன்றைக்கு எந்தெந்த பாதை வழியாக வெளி மாநிலத்திலிருந்து போதை பொருள் வருதோ,

உளவுத்துறை மூலமாக அதை கண்டறிந்து, அதை தடுத்து நிறுத்துனா போதைப்பொருள் நிறுத்தப்படலாம். ஆனால் இந்த போதை பொருள்  விற்பனையே திமுக கட்சிக்காரன் தான் செய்றாங்க. அதனாலதான்  அதை கட்டுப்படுத்த முடியல. காவல்துறை இன்னைக்கு ஏவல் துறையாக செயல்படுகிறது. ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக  போற்றப்பட்ட தமிழ்நாடு காவல்துறை,  இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஏவல் துறையாக செயல்படுவது வேதனை அளிக்கிறது என தெரிவித்தார்.

Categories

Tech |