Categories
அரசியல் மாநில செய்திகள்

TVல பார்த்த ஓபிஎஸ்…! அந்த ஒரு வார்த்தை… சட்டென்று கிளம்பிய கார்… சூடுபிடிக்கும் அதிகார போட்டி …!!

சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக வந்துள்ளது. இந்த தீர்ப்பு வருவதற்கு முன்னர், தங்களுக்கு தீர்ப்பு சாதகமாக வரும் என நம்பிக்கையுடன் ஓபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இருந்தனர். ஆனால் தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஆதரவாக வந்த நிலையில், ஓபிஎஸ்யின் வீட்டில் கோவை செல்வராஜ், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் உள்ளூர் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் குவிந்தனர்.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அவர் வீட்டில் இருந்தவாறு தொலைக்காட்சியின் மூலமாக நீதிமன்ற தீர்ப்பை பார்த்தார். பின்னர் சட்ட ஆலோசகர்களுடன் இதுகுறித்து விவாதம் நடத்தினார். ஆலோசனைக்கு பிறகு சென்னை செல்ல கிளம்பினார். சென்னை சென்று அங்கு சட்ட ஆலோசகர்களை சந்தித்து, அடுத்த கட்டமாக நடவடிக்கை எடுப்பதற்காக அவர் தற்போது கார் மூலமாக சென்னை கிளம்பினார்.

சென்னை செல்லும் முன்பு வீட்டை விட்டு வெளியே வந்த போது செய்தியாளர்கள் சந்தித்த ஓபிஎஸ், சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் அதிமுக சார்பாக மேல்முறையீடு செய்யப்படும் என்ற ஒரு வார்த்தையை அழுத்தம் திருத்தமாக சொன்னார். அதாவது தங்கள் தரப்பு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் என கூறவில்லை, அதிமுக சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்ற ஒரு வாதத்தை அவர் முன் வைத்தார்.

Categories

Tech |