Categories
தேசிய செய்திகள்

விண்ணை முட்டிய தீ….. மடமடவென வெடித்த 300 சிலிண்டர்கள்…. நடுரோட்டில் பயங்கரம்….!!!!

கண்ணிமைக்கும் நேரத்தில் கேஸ் சிலிண்டர்கள் அதிக சத்தத்துடன் வெடித்து சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூலில் இருந்து பிரகாசம் மாவட்டம் கோமரோலு மண்டலம் உளவுபாடு
பகுதிக்கு 306 கேஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு 12 மணியில் தேசிய நெடுஞ்சாலையில் பெத்த வாடா என்ற இடத்தில் லாரி சென்று கொண்டிருந்தபோது லாரியின் பின்பகுதியில் திடீரென தீப்பொறி கிளம்பியது. இதனை பார்த்த லாரி டிரைவர் மற்றும் கிளீனர் லாரியிலிருந்து குதித்து தப்பிவிட்டனர். சிறிது நேரத்தில் லாரியிலிருந்து கேஸ் சிலிண்டர்களுக்கு தீ பரவியதால் அனைத்து சிலிண்டர்களும் கண்ணிமைக்கும் நேரத்தில் அதிக சத்ததுடன் மடமட என வெடித்து சிதறியது.

இதனால் விண்ணை முட்டும் அளவிற்கு தீப்பிழம்பு கிளம்பியது. இதை தொடர்ந்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் இதைக்கண்டு அங்கேயே வாகனங்களை நிறுத்திவிட்டன. பிறகு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் சிலிண்டர்கள் தொடர்ந்து வெடித்து சிதறியதால் லாரியின் அருகே நெருங்க முடியாமல் தவித்தனர். அதற்குள் லாரி முழுவதும் எரிந்து சாம்பலானது. வெடித்த கேஸ் சிலிண்டர்கள் தேசிய நெடுஞ்சாலையில் சிதறி கிடந்தது. நள்ளிரவு நேரத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதால் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு பக்கமும் பல கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றனர். இதனால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Categories

Tech |