Categories
மாநில செய்திகள்

கடந்த மாதத்தில் மட்டும் 56 லட்சம் பேர் பயணம்… மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு…!!!!!!

மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,மெட்ரோ ரயில்களில் கடந்த ஆகஸ்ட் மாதம் 56 லட்சத்து 66 ஆயிரத்து 231 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். ஜூலை மாதத்தை காட்டிலும் ஆகஸ்ட் மாதத்தில் மூன்று லட்சத்து 48 ஆயிரத்து 572 பேர் அதிகமாக பயணம் செய்திருக்கின்றனர். இந்த நிலையில் அதிகபட்சமாக ஆகஸ்ட் 28ஆம் தேதி 2 லட்சத்து 20 ஆயிரத்து 898 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். மேலும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்கள் கியூ ஆர் கோடு குறியீடு மற்றும் பயன்பாட்டைகளை பயன்படுத்தி பயணிக்கும் நபர்களுக்கும் 20% தள்ளுபடி வழங்கி வருகின்றது. அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் qr கோடு பயன்படுத்தி 17 லட்சத்தி 95 ஆயிரத்து 61 பேரும் பயண அட்டை பயன்படுத்தி 34,42,151 பேரும் பயணம் மேற்கொண்டுள்ளனர் என அதில் கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |