Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்களே நம்பிக்கையோடு இருக்கீங்க…. உங்களை ஏமாற்ற விரும்பல.. கூட்டத்தை கண்டு மெர்சலான ஸ்டாலின் ..!!

கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் பொங்கலூர் பழனிச்சாமி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், இன்றைக்கு தமிழகத்திலே திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி ஆறாவது முறையாக பொறுப்பேற்று, நம்முடைய கழகம் மிகச் சிறப்பான வகையில் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றது. தேர்தல் நேரத்தில் என்னென்ன உறுதி மொழிகளை,  வாக்குறுதிகளை மக்களிடம் நாம் எடுத்துச் சொல்லி இருக்கிறோமோ, தேர்தல் அறிக்கையில என்னென்ன குறிப்பிட்டு காட்டி இருக்கிறோமோ,  அத்தனையும் நிறைவேறிவிட்டது என்று சொல்லி நான் உங்களை ஏமாற்ற விரும்பவில்லை.

ஆனால் நிச்சயமாக, உறுதியாக ஒரு 70% அதிலே நிறைவேறி இருக்கிறது. மீதம் இருக்கக்கூடிய 30 சதவீதமும் விரைவில் அதை நிறைவேற்றுவோம், அதை நிறைவேற்றி காட்டுவோம். என்று எல்லோருக்கும் நன்றாக தெரியும், உங்களுக்கும் நன்றாக தெரியும். அதை இன்றைக்கு மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள், எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள், நம்பிக்கையோடு இருக்கிறார்கள், இதை நான் குறிப்பிட்டு சொல்வதற்கு காரணம்.

நான்கு நாளைக்கு முன்பாக நான் கோயம்புத்தூருக்கு வந்தேன். விமான நிலையத்திலிருந்து அரசினர் விடுதி செல்கின்ற வரையில அதே இரவு 8 மணி அளவில் புறப்பட்டு,  விடுதிக்கு செல்லனும்னா கூட பத்து நிமிஷம், 15 நிமிஷத்துல போயிறலாம். ஆனால் மக்கள் தந்த வரவேற்பை நான் பெற்றுக் கொண்ட சென்ற காரணத்தினால்,  ஏறக்குறைய இரண்டு மணி நேரம் ஆச்சு, நான் போய் சேர்வதற்கு.

போகிற வழியெல்லாம், சாலைகளில் இரு புறங்களிலும் பெண்கள், ஆண்கள், முதியவர்கள், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆக எல்லா தரப்பு மக்களும் இரு புறங்களிலும் நின்று கொண்டு, என்னை வாழ்த்தி வாழ்க வாழ்க என்று கோஷமிட்டு,  அதே நேரத்தில் ஆங்காங்கே ஒரு சிலர் மனுக்களையும் கொடுத்து,  எப்போதும் சில பேர் மனுக்களை கொடுக்கும் போது கொஞ்சம் ஏக்கத்தோடு, கொஞ்சம் வருத்தத்தோடு, கொடுக்கிற மாதிரி பார்த்திருக்கிறேன். ஆனால் என்னிடம் மனு கொடுக்கும் போது, மகிழ்ச்சியோடு, பூரிப்போடு, நம்பிக்கையோடு, அதுவும் கொடுத்துட்டு நன்றி, நன்றி என்கிறாங்க என பெருமிதம் தெரிவித்தார்.

Categories

Tech |