Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: கொடநாடு வழக்கு – காவல்துறை அதிர்ச்சி தகவல் …!!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மூடி மறைக்கப்பட்ட பல விபத்துக்கள் தெரிய  வந்துள்ளதாக காவல்துறை தெரிவித்து இருக்கிறது.

முன்னாள் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றன. எஸ்டேட் காவலாளி கொலை செய்யப்பட்ட நிலையில் அங்கிருந்த ஏராளமான ஆவணங்களும் திருடு போனதாக குற்றச்சாட்டப்பட்டது. இது குறித்து விசாரணையானது தனிப்படையால் நடத்தப்பட்டு  வரக்கூடிய நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் தோழியான சசிகலா மற்றும் அவரது உறவினர் உள்ளிட்டோரிடம் இந்த விசாரணையானது நடைபெற்றது.

மேலும் ஜெயலலிதாவின் உடைய நேர்முக உதவியாளர் பூங்குன்றன், இந்த வழக்கில்  தொடர்புடைய உயிரிழந்த கார் ஓட்டுனர் கனகராஜ், அவரது உறவினர்கள், குற்றம் சாட்டப்பட்ட மனோஜ், சயான் உள்ளிட்டோரிடமும் விசாரணையானது நடைபெற்று வரக்கூடிய நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மனோஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில் கொடநாடு கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொண்டிருந்தார். இந்த மனு இன்றைய தினம் நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசினுடைய தலைமை குற்றவியல்  வழக்கறிஞர் ஜின்னா, இந்த வழக்கின் விசாரணையானது தீவிரமாக நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார்.

மேல்விசாரணை நடத்தப்பட்டதில் மூடி மறைக்கப்பட்ட பல விபத்துக்கள் மற்றும் புதிய தகவல்கள் தெரிய வந்துள்ளதாகவும், இந்த வழக்கு விசாரணைக்கு கால நிர்ணயம் செய்யக்கூடாது எனவும் அவர் கேட்டுக்கொண்டார். இதை அடுத்து வழக்கின் விசாரணை குறித்து அறிக்கை, வழக்கினுடைய விசாரணையின் தற்போதைய நிலை குறித்த அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கினுடைய விசாரணையை செப்டம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறார்.

Categories

Tech |