மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் இளம்பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள கூடப்பாக்கத்தில் மின்வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவரான சுப்பிரமணியன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு சுபிதா(21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு பிசியோதெரபி படித்து வந்துள்ளார். நேற்று கல்லூரியில் தேர்வுகள் முடிந்தது. இதனால் நண்பர்களுடன் விழாவை கொண்டாடிவிட்டு சுபிதா நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் கல்லூரியில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் சென்னீர்குப்பம் சர்வீஸ் சாலையில் சென்ற போது பின்னால் வேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியதால் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் சுபிதா லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் லாரி ஓட்டுனரான தன்ராஜ் என்பவரை கைது செய்து விசாரணை கொண்டு வருகின்றனர்.