Categories
தேசிய செய்திகள்

பான்கார்டு எண் அப்டேட்!.. இந்த மெசேஜ் வந்தால் நம்பாதீங்க…. எஸ்.பி.ஐ வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

பான்கார்டு புதுப்பிப்பு குறித்து உங்களுக்கு ஏதேனும் செய்தி வந்திருந்தால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்களது விபரங்களைப் பகிர்ந்தால், வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்பட வாய்ப்புகள் இருக்கிறது. PIB இந்த செய்தியின் உண்மையை தன்மையை சரிபார்த்து இருக்கிறது. உங்களுக்கும் இது போன்ற செய்தி வந்திருந்தால், அதற்கு முன்பு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள். எஸ்.பி.ஐ பெயரில் ஒரு போலி செய்தி வெளியிடப்பட்டு உள்ளது.

அச்செய்தியில் உங்கள் கணக்கை பிளாக் செய்யப்படாமல் காப்பாற்ற விரும்பினால், அவற்றில் உங்கள் பான்எண்ணை விரைவாக அப்டேட் செய்யுங்கள் என வாடிக்கையாளர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் இச்செய்தி முற்றிலும் போலியானது. வாடிக்கையாளருக்கு ஸ்டேட் பேங்க்ஆப் இந்தியா சார்பாக அத்தகைய செய்தி எதுவும் வெளியிடப்படவில்லை. ஆகவே இது போன்ற போலி செய்திகள் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்.  பிஐபி வெளியிட்டிருக்கும் விளக்கத்தில், இது போன்ற செய்திகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது. தனிப்பட்ட விபரங்களை யாருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் எனவும் வலியுறுத்தி இருக்கிறது.

இதன் காரணமாக உங்கள் வங்கி விபரங்களை யாருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். அவ்வாறு செய்தால் உங்களது கணக்கு ஹேக் செய்யப்பட்டு பணம் திருடப்படலாம். எனவே போலியான செய்திகள் வந்தால் [email protected] எனும் இந்த மெயிலில் புகார் செய்யலாம். இதுதவிர 1930 என்ற எண்ணிலும் தொடர்புகொண்டு புகாரளிக்கலாம். உங்களுக்கும் இது போன்ற போலிச்செய்திகள் வந்தால், அது உண்மையா என சரிபார்த்துக்கொள்ளலாம். இதற்கு https://factcheck.pib.gov.in/ எனும் அதிகாரப்பூர்வ இணைப்பைப் பார்க்கவேண்டும். இது தவிர்த்து +918799711259 என்ற வாட்ஸ்அப் எண் (அல்லது) [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் வீடியோவை அனுப்பலாம்.

Categories

Tech |