லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் இருக்கும் காய்கறி சந்தை மைதானத்தில் மனோஜ் என்பவர் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று காலை மனோஜ் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் காந்தி சிலை அருகே லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை மனோஜ் இடது புறமாக முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தில் மோதாமல் இருப்பதற்காக பிரேக் பிடித்த போது மனோஜகன் மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி கீழே விழுந்தது.
இதில் லாரி சக்கரத்தில் சிக்கி மனோஜ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று மனோஜின் உடலை விட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.