Categories
மாநில செய்திகள்

ALERT: பள்ளி மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பதிவு….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் பத்து மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவு பதிவினை தாங்கள் படித்த பள்ளியில் பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த முறையானது ரத்து செய்யப்பட்டது. இதனால் மாணவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரடியாக சென்று பதிவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனை அடுத்து கடந்த ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வேலை வாய்ப்பு பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுத்தப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டத்தில் 10 மற்றும் 12 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளியிலேயே வேலை வாய்ப்பு பதிவு செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் நிரந்தர மதிப்பெண் சான்று பெற்ற பிறகு மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட அனைத்து அசல் சான்றுகளோடு வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று நேரில் பதிவு பெற்று மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இதனை ஆன்லைன் மூலமாக மேற்கொள்வதற்காக tn.velaivaippu.com என்ற இணையதள முகவரிக்கு சென்று பதிவு செய்ய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல இசேவை மையம் மூலமாகவும் மாணவர்கள் தங்களுடைய வேலை வாய்ப்பு பதிவு, கூடுதல் பதிவுகள் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றின் மேற்கொள்ளலாம். எனவே இந்த வசதிகளை பயன்படுத்திக்கொண்டு விழுப்புரம் மாவட்ட மாணவ மாணவிகள் உடனடியாக வேலைவாய்ப்பு பதிவை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |