தமிழ் சினிமா திரையுலகில் நாளைய தீர்ப்பு எனும் படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகர் விஜய். இருப்பினும் அந்த படம் ஹிட் ஆகவில்லை. அதையும் தாண்டி கடுமையான விமர்சனங்களை அவர் சந்தித்துள்ளார். ஆனால் தனது உழைப்பையும் முயற்சியும் கைவிடாத விஜய் எந்த ஒரு விமர்சனத்தையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. இதை தொடர்ந்து படங்களில் மட்டும் நடிப்பதே முழுமூச்சாக நினைத்து பணியாற்றிய விஜய் இன்று தமிழ் சினிமாவின் இளைய தளபதியாக இருக்கின்றார். இந்த நிலையில் தற்போது வம்ச இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்க இருக்கின்றார்.
மாஸ்டர் படத்திற்கு பின் இவர்களின் கூட்டணி இணைய இருப்பதால் ரசிகர்கள் தளபதி 67 படத்தை ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த சூழலில் சமீபத்தில் விஜய் சென்னையில் 35 கோடி மதிப்பிலான வீடு ஒன்றை வாங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதை அவர் அலுவலகமாக பயன்படுத்த இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது விஜய் துபாயில் 65 கோடி மதிப்பிலான ஒரு அப்பார்ட்மெண்ட்டை வாங்கி இருக்கின்றாராம். இந்த தகவல் தான் தற்போது இணையதளத்தில் சம வைரலாக பரவி வருகின்றது. இந்த நிலையில் விஜய் தற்போது வாரிசு படத்தில் அடுத்த கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.