ரேஷன் கடைகளில் யுபிஐ வசதியை பயன்படுத்தி பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் என தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி கூறியுள்ளார். இதன்படி தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் கூகுள் பே, பேடிஎம் போன்ற யுபிஐ வசதி மூலமாக பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் பத்து நியாயவிலை கடைகளை மாதிரி நியாய விலை கடைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் படிப்படியாக அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என அமைச்சர் ஐ பெரியசாமி கூறியுள்ளார். மேலும் நியாய விலை கடைகளில் 2 கிலோ 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
Categories