தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனில் சமீபத்தில் இருவர் உயிரிழந்தனர். இதனால் போலீஸ் லத்தி பயன்படுத்துவது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. எனவே லத்தி பயன்படுத்த அதிகாரிகள் தடை விதித்து வாய்மொழி உத்தரவு பிறப்பித்தனர். இதனையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட கன்னியாகுமரி சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணத்தையடுத்து பெரிய அளவில் கலவரம் வெடித்தது. இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 160 க்கும் மேற்பட்ட போலீசார், அதிகாரிகள் தாக்கப்பட்டனர். இதற்கு போலீசாரிடம் தற்காப்புக்கு கூட லத்தி இல்லாததே காரணமாக கூறப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன் தினம் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்ட நிலையில் இன்று பெரும்பாலான மாவட்டங்களில் சிலைகள் கரைப்பு ஊர்வலம் நடைபெறுகிறது. மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் நலம் கருதி லத்தி ஷீல்டு எனும் தடுப்பு, உடல் கவசம் உடைகளை பயன்படுத்த மாநகர போலீஸ் கமிஷன் மண்டல போலீஸ் கமிஷனர், மண்டல ஐ.ஜி., டி.ஐ.ஜி., எஸ்.பி.களுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.