Categories
தேசிய செய்திகள்

ஸ்டார் வார்ஸ் படையுடன்….. திருமணம் மண்டபத்தையே….. வியப்பில் ஆழ்த்திய மணமகன்….. சுவாரஸ்ய சம்பவம்….!!!!

திருமணம் என்பது ஒவ்வொருவர்களின் வாழ்க்கையில் நடைபெறும் மிக முக்கியமான நிகழ்வு. தற்போது திருமணங்களில் நடைபெறும் வித்தியாசமான நிகழ்வுகளை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றன. அது பார்ப்பவர்களுக்கு சிரிப்பை கொடுக்கும் வகையில் உள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். ஏன் நமது நாட்டில் ஒவ்வொரு மதத்தினரும் ஒவ்வொரு விதமாக திருமணம் செய்து கொள்வார்கள். தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. அந்த வீடியோ பார்ப்பதற்கு வித்தியாசமாக உள்ளது.

முதலில் அந்த வீடியோவில் மணமகன் வித்தியாசமாக ஏதோ செய்ய முடிவு செய்துள்ளார். வித்தியாசமாக என்றி காட்டும் வகையில் மஞ்சள் வர்ண குர்தா பைஜாமா உடை அணிந்த மணமகன் தனது நண்பர் கூட்டத்துடன் மாப்பிள்ளை அழைப்பில் பங்கு கொள்கின்றார். அரங்கின் கதவு திறந்த உடனே ஸ்டார் வார்ஸ் தீம் பாடல் ஒலிக்க தொடங்குகிறது. மணமகன் தனது லைட் சேப்பரை சுற்றி அசைக்கிறார்.

அவரது பின்னால் சில குழந்தைகளும் இளைஞர்களும் வெள்ளை ஹெல்மெட்டுக்களுடன் உடை அணிந்து வருவதை காண முடிகின்றது. அது மட்டும் இல்லாமல் அவர்களுக்கு பின்னால் தோலில் wwe பெல்ட் அணிந்த ஒரு மனிதரும் வருகிறார். மாப்பிள்ளை தனது பரிவாரங்கள் சூழ சூழ மண்டபத்திற்குள் நுழைகின்றார். இதை பார்த்த விருந்தினர்களின் முகம் மகிழ்ச்சியில் ஆழ்ந்தது. சிறிது நேரம் ஒலி வாழை வீசிய பிறகு மணமகன் நடனமாடுகிறார். இந்த வீடியோஸ் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |