Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில்…. “மாணவிகளுக்கு இயற்கை நல பெட்டகம் வழங்கல் நிகழ்ச்சி”….!!!!!

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு இயற்கை நலப் பெட்டகம் வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பாக 19 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு இயற்கை நல பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் தலைமை தாங்க இயற்கை மருத்துவ பிரிவின் உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் செந்தில்குமார் பங்கேற்று உபவாச சிகிச்சை, யோகா சிகிச்சை, உணவு சிகிச்சை, மண் சிகிச்சை, நீர் சிகிச்சை, மசாஜ் மற்றும் நறுமண சிகிச்சை, நிற சிகிச்சை, இயன்முறை சிகிச்சை, இயற்கை மூலிகை சிகிச்சை உள்ளிட்டவற்றை பற்றி உரையாற்றினார்.

இதையடுத்து 19 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு முருங்கை இலை பொடி, கருவேப்பிலை பொடி, நெல்லிக்காய் பொடி மற்றும் தேன் உள்ளிட்டவை அடங்கிய தமிழக அரசின் இயற்கை நல பெட்டகமானது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டார்கள்.

Categories

Tech |