தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடக தெலுங்கானா மாநில முதல்வர்கள் மற்றும் லட்சத்தீவு மற்றும் அந்தமான் தீவுகளின் லெஃப்ட்னல் கவர்னர்கள் கலந்து கொள்ளக்கூடிய 30-வது கவுன்சில் கூட்டம் கோவளத்தில் நாளை நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டமே தென் மாநிலங்களில் நிலவுகின்ற சட்ட ஒழுங்கு பிரச்சனைகள், உட்கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், மாநில எல்லை விவகாரங்கள், பெண்கள் பாதுகாப்பு, மாநிலங்களுக்கிடையே நிலவும் நீர் பிரச்சனைகள் அனைத்தையும் பேசுவதற்காக தான்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை நடைபெறக்கூடிய கூட்டத்தில் பல்வேறு கருத்துக்களை முன்வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கேரளா சென்றுள்ள தமிழக முதல்வர் முக.ஸ்டாலினை கேரள முதல்வர் பினராய் விஜயன், ஸ்டாலின் தங்கி இருக்கும் தங்கி இருக்கக்கூடிய லீலா ரிசார்ட்க்கே நேரில் வந்து சந்தித்து இருக்கின்றார். இருவரும் கடந்த ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக ஆலோசனை செய்து வருகிறார்கள்.
மத்திய அரசு தலைமையில் நடைபெறக்கூடிய கூட்டம் என்பதால் அதில் பல்வேறு பிரச்சனைகளை முழுமையாக பேசக்கூடிய இரு மாநிலங்கள் என கேரளா மற்றும் தமிழகம் பார்க்கப்படுகின்றது. என்ன மாதிரி கோரிக்கை வைக்கலாம் ? உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இருவரும் முன்கூட்டியே ஆலோசிப்பதாக சொல்லப்படுகின்றது. தமிழகம் – கேரளா சேர்ந்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசும் என சொல்லப்படுகின்றது.
இந்த நிலையில் தான் தற்போது தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் திராவிடம் என்று ட்விட் செய்துள்ளார். கேரள முதல்வர் – முக.ஸ்டாலின் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்வு, குறிப்பாக திராவிட பூமி என தென் தமிழகத்தை அழைப்பதுண்டு அதனையெல்லாம் கணக்கில் கொண்டு திராவிடம் என்று ஸ்டாலின் சொல்கிறாரோ என அரசியல் பார்வையாளர்கள் தங்கள் கருத்துக்களை முன் வைக்கின்றார்கள்.
திராவிடம்
— M.K.Stalin (@mkstalin) September 2, 2022
இன்று காலை முதல் ட்விட்டரில் ஒற்றைச் சொல் ட்விட் ட்ரெண்டாகி வருகிறது. இதை தொடங்கி வைத்தது அமெரிக்கா. அங்குள்ள ரயில் சேவை நிறுவனமான ஆம்ட்ராங் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒற்றை சொல்லாக ”ட்ரெயின்” என்று பதிவிட்டு இருந்தது. அதிகாலை 12:30 மணிக்கு பதிவிட்ட இந்த ட்விட்டை பலரும் ரீட்வீட் செய்யத் தொடங்கினர். இதை எடுத்து அனைவரும் விரும்பி அவர்களுக்கு ஏற்றார் போல் ஒற்றை சொல்லை ட்விட் செய்தனர். இந்த வரிசையில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலினும் இணைந்துள்ளார்.