Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு…. அரசு போட்ட சூப்பர் பிளான்…. குஷியில் மாணவர்கள்….!!!!

அரசு பள்ளிகளில் 6-ஆம்  வகுப்பு முதல் 9-ஆம்  வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ஒரு திரைப்படம் திரையிடப்படும் என தெரிவித்துள்ளனர். 

நமது தமிழ் நாட்டில் உள்ள  அனைத்து அரசு பள்ளிகளிலும் 6-ஆம்  வகுப்பு முதல் 9-ஆம்  வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ஒருமுறை குழந்தைகள் தொடர்பான திரைப்படம் திரையிடப்படும். அப்படி திரையிடப்பட்ட அந்த படத்தின் மீது அதிக விமர்சனம் செய்யும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு  வெற்றி பெறுபவர்கள் வெளிநாட்டிற்கு அழைத்து செல்லப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி நேற்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 6-ஆம் வகுப்பு   முதல் 9-ஆம்  வகுப்பு வரை படித்து வரும் மாணவர்களுக்கு ஈரானிய திரைப்படமான சில்ட்ரன் ஆஃப் ஹெவன் திரைப்படம் திரையிடப்பட்டது.

மொத்தம் 87 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த திரைப்படம் குழந்தைகளின் மனநிலையை பேசும் உணவுப்பூர்வமான கதைக்களத்தை கொண்டது. மேலும் பாரசீக மொழியில் உள்ளது.  இந்த படத்தின் சப் -டைட்டிலில் ஆங்கிலம்  இடம் பெற்றுள்ளது.  படம் திரையிடப்படுவதற்கு முன்பு ஆசிரியர்கள் திரைப்படத்தின் கதையை மாணவர்களுக்கு விளக்கியுள்ளனர்.

அதனால் மாணவர்கள் திரைப்படத்தை ஆர்வமாக பார்த்து ரசித்து ஆரவாரம் செய்துள்ளனர். மேலும் சில பள்ளிகளில் இந்த திரைப்படம் திரையிடப்படும் போது சிறப்பு அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். அதில்  சென்னை மாவட்டத்தில் உள்ள விருதம்பாக்கம் ஜெயகோபால் கரோடியா அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடிகர் நாசர், அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, கோடம்பாக்கம் பதிப்பகச்  செம்மல் கணபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடிகர் பொன்வண்ணன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள், கவிஞர்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு குழந்தைகளை உற்சாகப்படுத்தினர். மேலும் மாணவர்களின் வகுப்பறைக்கு சென்று அவர்களுக்கு  தன்னம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக பேசியுள்ளனர்.

Categories

Tech |