உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp பயன்படுத்தி வருகிறார்கள்.பயனர்களுக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆன்லைனில் இருப்பதை யார் யாரெல்லாம் பார்க்க வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளும்படி புதிய அப்டேட்டை whatsapp நிறுவனம் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து whatsapp குரூப்பில் இருந்து யாருக்குமே தெரியாமல் வெளியேறும் படியான அப்டேட் வெளியாக இருக்கிறது.
மேலும் வாட்சப் செயலியில் இருந்து பொருட்களை ஆர்டர் செய்து கொள்ளும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.whatsapp செயலியில் இருந்தே பொருட்களை வாங்கி அதிலேயே பணப்பரிவர்த்தனைகளை பயனர்கள் செய்து கொள்ள முடியும்.இந்நிலையில் வாட்ஸ் அப் செயலியில் இருந்து இரண்டாவது நம்பர் இல்லாமல் உங்களுக்கே செய்தி அனுப்பிக் கொள்ளும் படியான அப்டேட் விரைவில் வரவுள்ளது.
இந்த அப்டேட் மூலமாக முக்கியமான செய்திகள் ஆகியவற்றை நீங்கள் மட்டும் தெரிந்து கொள்வதற்காக சேமித்து வைத்துக் கொள்ளலாம்.இந்த புதிய அப்டேட் சோதனை இல் உள்ள நிலையில் கூடிய விரைவில் இந்த அப்டேட்டை whatsapp நிறுவனம் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.