Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

CAA-க்கு எதிராக ஒற்றைக் கோரிக்கை ஆர்ப்பாட்டம்..!

தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி, இந்திய சமூக ஜனநாயகக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம், கருங்கல் பாளையத்தில் காந்தி சிலை முன்பு இந்திய சமூக ஜனநாயகக் கட்சியினர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்று குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகைப் பதிவேடு ஆகியவற்றை அமல்படுத்தமாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி, ஒற்றைக் கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தில் அதிமுக அரசு செய்த தவறை உணர்ந்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |