இன்று காலை முதல் ட்விட்டரில் ஒற்றைச் சொல் ட்விட் ட்ரெண்டாகி வருகிறது. இதை தொடங்கி வைத்தது அமெரிக்கா. அங்குள்ள ரயில் சேவை நிறுவனமான ஆம்ட்ராங் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒற்றை சொல்லாக ”ட்ரெயின்” என்று பதிவிட்டு இருந்தது. அதிகாலை 12:30 மணிக்கு பதிவிட்ட இந்த ட்விட்டை பலரும் ரீட்வீட் செய்யத் தொடங்கினர். இதை எடுத்து அனைவரும் விரும்பி அவர்களுக்கு ஏற்றார் போல் ஒற்றை சொல்லை ட்விட் செய்தனர்.
அமெரிக்க அதிபர் ஜோபைடன் ”டெமோகிராஸி” என்று ட்விட் செய்தார். அதாவது ”ஒற்றை சொல்லில்” அவரவர் நிறுவனம், கட்சி, பணி என பல வகைகளில் ட்விட் செய்து வந்தனர். அதிமுக பொதுக்குழு தீர்ப்பு ஈபிஎஸ்சுக்கு ஆதரவாக வந்த நிலையில் அதிமுகவின் அதிகாரபூர்வ பக்கத்தில் எட்டப்படியார் என ட்விட் செய்யப்பட்டது.
எடப்பாடியார்
— AIADMK (@AIADMKOfficial) September 2, 2022
அதே போல தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் திராவிடம் என ட்விட் செய்திருந்தார்.
திராவிடம்
— M.K.Stalin (@mkstalin) September 2, 2022
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்த்தேசியம் என ட்விட் செய்திருந்தார்.
தமிழ்த்தேசியம்
— சீமான் (@SeemanOfficial) September 2, 2022
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழன் என்று ட்விட் செய்திருந்தார்.
தமிழன்
— K.Annamalai (@annamalai_k) September 2, 2022
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் சமூகநீதி என ட்விட் செய்துள்ளார்.
சமூகநீதி
— Dr S RAMADOSS (@drramadoss) September 2, 2022
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழ்நாடு என ட்விட் செய்துள்ளார்.
தமிழ்நாடு
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) September 2, 2022