Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திடீரென கட்டுபாட்டை இழந்த கார்…. டிரைவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கட்டுப்பாட்டை இழந்த கார் மரம் மீது மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள வீரபாண்டி சபாபதிநகரில் முருகானந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராக்கியாபாளையம் பிரிவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முருகானந்தன் அந்த நிறுவனத்தின் உரிமையாளருடைய மனைவியை காரில் கரூருக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரை உறவினர் வீட்டில் இறக்கி விட்டு அதன்பின் காரில் கரூரில் இருந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது சிவன்மலை அரசம்பாளையம் பகுதியில் கார் வந்து கொண்டிருந்த போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் முருகானந்தம் காருக்குள் சிக்கி பலத்த காயமடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த காங்கேயம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகானந்தத்தை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு முருகானந்தத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காங்கேயம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |