சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பூப்பாண்டியாபுரம் பகுதியில் மந்தையா குரூஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜேம்ஸ் என்ற மகன் உள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு ஜேம்ஸ் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாயார் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜேம்சை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சாமிநாதன் ஜேம்சுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.