Categories
பல்சுவை

உங்க வீட்டு ரோஜா பூவே பூக்கலையா…? இதை மட்டும் செய்யுங்க…. இனி கொத்து கொத்தாக பூக்கும்…!!!!

பொதுவாக அனைவருடைய வீட்டிலுமே செடி வளர்ப்பது உண்டு. செடி வளர்ப்பது என்பது பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் குறிப்பாக ரோஜா செடி வீட்டில் வளர்த்து அதில் வளரும் பூக்களை பறிப்பதிலேயே ஒரு சந்தோஷம் இருக்கிறது. ஆனால் ரோஜா செடி வளர்க்கும் போது நாம் பல தவறுகளை செய்கிறோம். ரோஜா செடியை வளர்க்கும் போது பல விஷயங்களை நாம் தெரிந்து கொள்வது அவசியம். செடிகள் ஆரோக்கியமாக வளர்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம். இதை தெரிந்தால் தான் செடியில் அதிகமாக பூ பூக்கும். முதலில் ரோஜா செடியை வாங்கும் பொழுது அதில் பூக்கள் பூத்திருக்கும்.

எனவே அந்த பூக்களை முதலில் பறித்து விட வேண்டும். அப்பொழுதுதான் அதிலிருந்து கிளைகள் வளர தொடங்கி ரோஜா மொட்டுக்கள் தளர்விட ஆரம்பிக்கும். மண் கலவையோடு வேப்பம் புண்ணாக்கு சேர்த்து செடிகளை நடலாம்இது பெரும்பாலும் உரக்கடைகளில் கிடைக்கும். இதனால் செடிகள் ஆரோக்கியமாக வளரும். ரோஜா செடிகளுக்கு செயற்கையாக விற்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த வேண்டாம். இயற்கையாகவே சில பூச்சிக்கொல்லி மருந்துகளை நம் வீட்டில் தயாரிக்கலாம். வேப்ப இலைகளை எடுத்து அதோடு 4,5 பூண்டு தோலை சேர்த்து தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

பின்னர் இந்த கலவை வடிகட்டி எடுத்துக்கொண்டு ஸ்பிரே பாட்டில் மூலம் ஸ்பிரே செய்தால் பூச்சி தொல்லை இல்லாமல் இருக்கும். நன்கு சூரிய ஒளி படும் இடத்தில் ரோஜா செடிகளை வைக்க வேண்டும். அடிக்கடி இடத்தில் மாற்றக்கூடாது. சரியான இடத்தை தேர்ந்தெடுத்த பிறகு நல்ல தரமான உரம் நிறைந்த மண் பயன்படுத்த வேண்டும். உரம் மற்றும் களிமண் சேர்த்து மண் கலவையை தயார் செய்யலாம். ரோஜா செடிகள் வளர்வதற்கு தண்ணீர் தேவை. வறண்ட வானிலையில் குறைந்தது வாரத்திற்கு ஒரு முறை செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது அவசியம். உதிர் நிலையில் உள்ள பூக்களை அகற்றுவது புதிய பூக்கள் வளர்வதை ஊக்குவிக்கிறது. செடிகளை சரியான முறையில் கவாத்து செய்து விடும்போது அது அடர்த்தியாக வளர அதனுடைய வளர்ச்சி ஊக்கிவிக்கும். ஆனால் இதை வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே செய்ய வேண்டும்.

Categories

Tech |