செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, தேனி மாவட்டத்தில் ஒரு தொகுதியாவது ஜெயிக்க முடிந்ததா? அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 39 தொகுதிகளிலும் ஒரு நாடாளுமன்றம் தான் ஜெயித்தது, நாடாளுமன்றத்தில் பெயர் இருக்கிறது. அங்கே சட்டமன்றம் ஜெயிக்கவில்லை, சென்னையில் என்ன கிழித்தீர்கள் ? நீங்கள் சென்னையில் எத்தனை தொகுதி ஜெயித்தது ? அவர் ஜெயித்து வந்துவிட்டார் விடுங்கள் நீங்கள், எத்தனை இடத்தில் சென்னையில் ஜெயித்தீர்கள் ? சென்னை ஜீரோ.
மதுசூதனன் அவர்களை தனியாக நிற்கும் போது நான் கேட்டேன். எதற்கு இவ்வளவு போர்ஸ் இல்லாமல், நீங்கள் டிடிவி தினகரனை எதிர்த்து நிற்கிறீர்கள் என்று கேட்கிறேன், அவர் சொன்ன வார்த்தையை சொல்ல முடியாது அவர் அப்படித்தான் ஜாலியாக பேசுவார். வாயிலிருந்து வரும் தமிழில் பேசுவார். ஒருமாதிரி பேசுவார். ”மக்களா ஓட்டு போடல, நம்மள தேர்ந்தெடுக்கல, விடுப்பா, அவர்கள் இல்லைபா இவன்பா ஜெயக்குமார் தோற்கடித்து விட்டார்” என்று அவர் என்னிடம் கூறியுள்ளார்.
அவ்வளவு பெரிய அயோக்கியன், நீங்கள் இப்போது நல்லது பேசிக் கொண்டிருக்கிறீர்களா? உங்களிடம் என்ன ஆதாரம் இருந்தாலும் ஓபிஎஸ் மீது அதை வெளியே கொண்டு வாங்க, கொள்ளையடித்து அமைச்சர்கள் ஒருவரும் தப்ப முடியாது, இந்த அரசு இன்னும் கைது செய்யாமல் இருக்கிறது. அது தான் வேதனையாக இருக்கிறது என தெரிவித்தார்.