Categories
உலக செய்திகள் வானிலை

கொட்டித்தீர்க்கும் கனமழை…. வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பால்….. அச்சத்தில் பொதுமக்கள்….!!!!

பாகிஸ்தான் நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் நாட்டில் உள்ள பல்வேறு மாகாணங்களில் கடும் வெள்ளம் சூழ்ந்து சாலைகள் சேதமடைந்து போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி உள்ளது என தேசிய பேரிடர் வேளாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து  கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஸவாட் பள்ளத்தாக்கின் அருகே உள்ள கிராமத்தை இணைக்கும் பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி அழிந்துள்ளது.

குறிப்பாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், அரசு சாரா அமைப்புகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் மூலம் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதனை அடுத்து வெள்ளம் பாதித்த பகுதிகளில் மாற்று பாதை அமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “நாடு முழுவதும் அடுத்த சில நாட்களுக்கு கனமழை தொடரும்” என்பதே ஆகும். இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Categories

Tech |