மயிலாடுதுறை சேர்ந்த ஸ்ரீவாச மாசிலாமணி சென்னை உயர்மண நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறையில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்காக கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்காக டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் என்று அரசாணையில் குறிப்பிட்டு இருந்தது. அதற்கு பட்டப்படிப்பு மற்றும் குறைந்தது இரண்டு வருடங்கள் மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி இருக்க வேண்டும் என்ற தகுதியின் அடிப்படையில் அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியானது தற்காலிக பணியாக அமர்த்தப்பட்டு, அதன் பிறகு நிரந்தரப்படுத்தப்படுவார்கள்.
இது போன்ற தற்காலிக பணி நியமித்து டிஎன்பிஎஸ்சி மூலம் பணியமர்த்த முடியாது. எனவே உதவி மக்கள் தொடர்பு அலுவலர் நியமணத்தை உயர்கல்வி தகுதியின் அடிப்படையில் நேரடி நியமனமாக நியமிக்கவும், கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் அரசாணை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, தற்காலிக பணிக்கென குறிப்பிட்ட படிப்பு அவசியம் இல்லை. மேலும் தற்காலிக பணி நியமினத்தை டிஎன்பிஎஸ்சி மூலம் நியமிக்க முடியாது என்பதால் இந்த அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார். அதனைத் தொடர்ந்து உதவி மக்கள் தொடர்பு அலுவலர் நியமனம் குறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.