தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். மேலும் சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ஆகவும் பணியாற்றி வருகிறார். சமீப காலமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் மகன் என்பதாலோ என்னவோ? உதயநிதி ஸ்டாலின் பெயர் தமிழக அரசியலில் ஓயாமல் ஒழிப்பதை கேட்க முடிகிறது. இதற்கு காரணம் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பதவி ஏற்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழைப்பு விடுத்து அரசியல் களத்தை பரபரப்பாக்கியது தான். அதனை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் கூட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கருத்தை வரிசை காட்டி வழிமொழிந்தபடி வருகின்றனர். இதனால் உதயநிதி ஸ்டாலின் எந்த நேரத்தில் அமைச்சரவையில் இடம் பிடிக்கலாம் என்கின்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் நிலவி வருகிறது. அதே நேரத்தில் திமுக மேலிடமும் உதயநிதி ஸ்டாலின் குறித்து வெளியாகும் தகவல்களும் எந்தவித மறுப்பும் சொல்லாமல் மௌனம் காத்து வருகிறது.
இதற்கிடையில் உதயநிதி ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் செய்தியாளர்கள், உங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதா? என்று கேள்வி எழுப்புகின்றனர்.இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தலைமை முடிவு எடுக்கும் என்று பதில் அளித்து வருகிறார். இதன் மூலம் அமைச்சர் பதவி வழங்கப்படுவது உறுதி தான் என்று பேசப்பட்டாலும் இன்னுமும் அதிகாரப்பூர்வமாக சொல்லப்படாதது தான் திமுகவினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கட்டம் சரியில்லாத காரணத்தினால் அமைச்சர் பதவி வழங்குவதில் இழுபறி நீடிப்பதாகவும், அதே நிவர்த்தி செய்வதற்கு குடும்பத்தினர் தீவிரம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் அமைச்சர் பதவியை ஏற்றுவிட்டால் நட்புகளுடன் சேர்ந்து ஊர் சுற்ற முடியாது எங்கு போனாலும் கண்கொத்தி பாம்பாக கேமராக்கள் கவனிக்கும் என்று உடன் இருக்கும் நெருங்கிய நண்பர்கள் ஏற்றி விடுவதால் அமைச்சர் பதவி வேண்டாம் என்று முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் உடன்பிறப்புகள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக நம்பகத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.