டெல்லியில் உள்ள குழுகிராமில் நாதுபூர் என்ற பகுதியில் அரை நிர்வாண நிலையில் இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் இளம் பெண் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
அதனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பிறகு தான் இளம்பெண் எப்படி இறந்தார் என்பது குறித்து தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பெண் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அரை நிர்வாண நிலையில் இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.