Categories
சினிமா

“நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?”…. ஆர்யா பரபரப்பு பேட்டி….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் காமெடி படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்லா வரவேற்பை பெற்று வருகிறது. இவர் தற்போது கேப்டன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஆர்யா-சக்தி சௌந்தரராஜன் ஜோடி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி, ஹரிஸ், உத்தமன், காவியா ஷெட்டி ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

கேப்டன் திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் நடிகர் ஆர்யாவின் தி ஷோ பிபுள் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 8 ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனையடுத்து இப்படத்தின் பிரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஆர்யாவிடம் பத்திரிக்கையாளர்கள் அரசியலுக்கு வருவீர்களா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு ஆர்யா, “அரசியலில் வரும் அளவிற்கு எனக்கு மூளை இல்லை” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |