கேரளாவில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகின்றது. இதற்காக மரத்தை வெட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றன. அப்போது ஒரு மரத்தை வெட்டிய போது அந்த மரத்திலிருந்து 100-க்கும் மேற்பட்ட பறவை குஞ்சுகள் இறந்து போனது. கேரள மாநிலம், மல்லபுரத்தில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக நேற்று முன்தினம் அங்குள்ள விகே படி என்ற இடத்தில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டன. அப்பகுதியில் உள்ள புளியமரம் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் வேரோடு சாய்க்கப்பட்டது.
https://www.youtube.com/watch?v=EBaGVobA13w
இந்த மரத்தில் நீர் காகம் உள்ளிட்ட ஏராளமான அரிய வகை பறவை கூடுகள் கட்டப்பட்டிருந்தது. ஆனால் அதை கவனிக்காமல் ஊழியர் மரத்தை வெட்டியதால் 100க்கும் மேற்பட்ட பறவை குஞ்சுகள் கீழே விழுந்து பரிதாபமாக துடிதுடித்து இறந்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. மரத்தை வெட்டும்போது அதில் உள்ள பறவை கூடுகளில் முட்டைகளோ குஞ்சுகளோ இருந்தால் அவை பெரிதாகி பறக்கும் வரை மரத்தை வெட்டக்கூடாது என்பது சட்டம். அதை மீறி ஒப்பந்தக்காரர் இந்த சம்பவத்தை செய்ததால் வனத்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.