சி.பி.எஸ்.இ 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை 22ஆம் தேதி என்று வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை சேர்ந்து வருகிறார்கள். சில பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் அச்சிடப்பட்ட காகித வடிவம் மாற்றுச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இது குறித்து சிபிஎஸ்சி தேர்வு கட்டுப்பாடு அதிகாரி சன்யம் பரத்வாஜ் கூறியது, பொதுவாக அச்சிடப்பட்ட சான்றிதழ் மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. உடனடியாக வழங்கிவிடும்.
இருப்பினும் மாணவர்களின் டிஜிலாக்கரில் இடம்பெற்றுள்ள மின்னணு வடிவிலான மதிப்பெண் மற்றும் தேர்ச்சி சான்றிதழ், மாற்று சான்றிதழ் ஆகியவை தேர்வு கட்டப்பாட்டு அதிகாரியின் மின்னணு கையெழுத்துடன் உள்ளது. அவையும் சட்டரீதியாக செல்ல தக்கவை. எனவே அந்த மின்னணு சான்றிதழ்களை ஏற்றுக் கொள்ளுமாறு அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு பல்கலைக்கழகம் மானிய குழு உத்தரவிட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.