இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழக முதுநிலை மண்டல இயக்குனர் கே. பன்னீர்செல்வம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் தொழில்துறை மற்றும் வேலை வாய்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் MBA படிப்பு முழுமையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி சேவை, சந்தைப்படுத்துதல், இயக்கம், நிதி, இயக்கம் போன்றவற்றின் மேலாண்மை குறித்து கற்பிக்கப்பட இருக்கிறது. இதற்கு ஏஐசிடி ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்பிறகு 3 வருட பட்டப்படிப்பில் சேர விரும்புவர்கள் 50 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தால் ஏதாவது ஒரு படிப்பை தேர்ந்தெடுத்து படிக்கலாம். இதில் இட ஒதுக்கீட்டுக்கு தகுதி பெற்ற மாணவ-மாணவிகள் 40 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்தால் போதுமானது. இதைத்தொடர்ந்து 2 முதல் 4 ஆண்டுகள் வரை பயிற்சி.
ஒரு பருவத்துக்கு 15 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதற்கான கடைசி தேதி செப்டம்பர் 9 ஆகும். இந்த படிப்புகளில் தொலைதூர முறையில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவ-மாணவிகள் https://ignouadmission.samarth.edu.in என்ற ஆன்லைன் முகவரியிலும், ஆன்லைன் மூலம் படிக்க விரும்புபவர்கள் https://ignouiop.samarth.edu.in என்ற ஆன்லைன் முகவரியிலும் விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.ignou.ac.in என்ற இணையதளத்திலும்,[email protected] மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 044-2661 8040 என்ற தொலைபேசி எண்ணுக்கும் தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ளலாம்.