தெலுங்கானா மாநிலத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது ஜாகிராபாத் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட காமிரெட்டி மாவட்டம் பன்ஸ்வாடா நகருக்கு அருகே உள்ள ரேஷன் கடை ஒன்றில் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரோடு மாவட்ட கலெக்டர் ஜித்தேஷ் பாட்தீலும் உடன் இருந்தார். அப்போது அங்கிருந்த ரேஷன் கடையில் பேனரில் பிரதமரின் படம் ஏதுமில்லை என்று நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார். மேலும் நிர்மலா சீதாராமன் கேட்ட பல கேள்விகளுக்கு கலெக்டரிடம் இருந்து பதில் எதுவுமே இல்லை.
ரேஷன் அரிசியில் மத்திய அரசு வழங்கும் மானியம் எவ்வளவு என்றும் கேள்வி அனுப்பினார். அதற்கும் பதில் சரியாக சொல்ல தெரியாமல் அந்த கலெக்டர் தடுமாறியுள்ளார். இதனால் கோபமடைந்த நிர்மலா சீதாராமன் தெலுங்கானா கேடில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரி நீங்கள். உங்களுடைய பதிலை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இன்னும் அரை மணி நேரத்தில் சரியான பதிலை தெரிந்து கொண்டு சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். பின்னர் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி கோதுமை போன்றவற்றுக்கான நிதியில் பெரும் பங்கை மத்திய அரசுதான் வழங்குகிறது.
அரிசியின் மொத்த விலையான 35 இல மத்திய அரசு 28 மானியமாகவும் மாநில அரசு 6 மானியமாகவும் வழங்குகிறது. இதனை மக்கள் ஒரு ரூபாய்க்கு பெற்றுக் கொள்கிறார்கள் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது குறித்த வீடியோவை பாஜக தலைவர் ஒருவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டதையடுத்து அது வைரலாக பரவி வருகிறது.