காங்கோ நாட்டின் ஐ.நா சபையினுடைய ஹெலிகாப்டர் திடீரென்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் நிர்வகித்து வரும் ஐ.நா சபையினுடைய மனிதாபிமான சேவைகளுக்கான ஹெலிகாப்டர், வடக்கு கிவு மாகாணத்தில் பறந்து கொண்டிருந்த போது, கோமா நகரத்திற்கு பக்கத்தில் விழுந்து நொறுங்கியது.
இதில், அந்த விமானத்தின் ஊழியர்கள் மூவருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், திடீரென்று இந்த விபத்து ஏற்பட என்ன காரணம்? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்று ஐ.நா உலக உணவு திட்ட அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.