Categories
சினிமா தமிழ் சினிமா

“லால் சிங் தாத்தா” கேரியரில் மிகப்பெரிய பிளாப் படம்‌…. அமீர்கானின் திடீர் முடிவு…. பாலிவுட் வட்டாரங்கள் நெகழ்ச்சி….!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் அமீர்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான லால் சிங் தத்தா திரைப்படம் மிகப்பெரிய அளவில் தோல்வி அடைந்தது. கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி பான் இந்தியா அளவில் ரிலீஸ் ஆன லால் சிங் தத்தா திரைப்படத்திற்கு பல பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தாலும் தியேட்டரில் எதிர்பார்த்த அளவிற்கு கூட்டம் வரவில்லை. இந்த படத்தின் தோல்விக்கு முக்கிய காரணம் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக இணையத்தில் பாய் காட் லால்‌ சிங் தத்தா என்ற ஹேஷ்டேக்குகள் தீயாக பரவியது. இதுதான் படத்தின் தோல்விக்கு மிகப்பெரிய காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் 180 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் 100 கோடி கூட வசூல் செய்யவில்லை.

இதனையடுத்து லால் சிங் தத்தா திரைப்படம் தான் அமீர்கானின் கேரியரில் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்துள்ளது எனவும் கூறப்படுகிறது. இந்த சூழலில் படத்தின் நஷ்ட ஈடை சரி செய்வதற்காக அமீர்கான் ஒரு முக்கிய முடிவு எடுத்துள்ளாராம். அதாவது லால் சிங் தத்தா திரைப்படத்தில் தான் நடித்ததற்கான சம்பளத்தை வாங்க வேண்டாம் என்று அமீர்கான் முடிவு செய்துள்ளாராம். ஒருவேளை அமீர்கான் தன்னுடைய சம்பளத்தை வாங்கினால் வயாகம் 18 ஸ்டூடியோவுக்கு 100 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும். இதன் காரணமாகத்தான் சம்பளத்தை வேண்டாம் என்று அமீர்கான் கூறியுள்ளார். மேலும் படத்தின் தோல்விக்கு தானே பொறுப்பேற்றுக் கொண்டு சம்பளத்தை வேண்டாம் என்று கூறிய அமீர்கானின் செயலை பார்த்து பாலிவுட் வட்டாரங்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |