Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

காதலர் தினம் சிறப்பு….. முரட்டு காளைகளை அடக்கிய….. முரட்டு சிங்கிள்ஸ்…… வேலூரில் அனல் பறந்த ஜல்லிக்கட்டு…..!!

வேலூர் அருகே காதலர் தினத்தையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

வேலூர் மாவட்ட பகுதிகளைச் சுற்றியுள்ள மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆங்காங்கு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் காதலர் தினத்தையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு போட்டியானது மேல் வல்லம் கிராமத்தில் நடைபெற்றது. வேலூர், திருவண்ணாமலை, இராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 199 காளைகள் போட்டியில் ஈடுபடுத்தப்பட்டன.

காதலன் காதலியுடன் கொண்டாடவேண்டிய நாளில் காதலி இல்லாத முரட்டு சிங்கிள்ஸ் காளைகளை அடக்க களத்தில் நின்றனர். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்ற போட்டியில் பல்வேறு காளைகளை வீரர்கள் அடக்கினர். பல காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் சென்றன.  இந்த போட்டியில் 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட அவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. காதலர் தினத்தையொட்டி நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

Categories

Tech |