Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: உங்ககிட்ட ஜியோ சிம் இருக்கா?…. அப்போ இதை உடனே படிங்க….. மிகப்பெரிய ஆபத்து….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது,உங்கள் மொபைல் எண்ணின் கேஒய்சி பூர்த்தி செய்யும் படி மோசடி செய்திகள் வருவது குறித்து எச்சரிக்கையாக இருங்கள். மின்னஞ்சல் அல்லது எஸ் எம் எஸ் மூலமாக பெறப்படும் சந்தேகத்திற்கு இடமான இணைப்புகளை யாரும் க்ளிக் செய்ய வேண்டாம்.ஓடிபி மற்றும் பிற நிதி தகவல்கள் போன்ற ரகசிய தகவல்களைத் திருடன் மோசடி செய்பவர்கள் உங்கள் சாதனத்தை பிரதிபலிக்கலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் கூடுதல் மொபைல் டேட்டா பலன்களை பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் என்று வரும் எஸ்எம்எஸ் போன்ற எதையும் வாடிக்கையாளர்கள் கிளிக் செய்ய வேண்டாம் எனவும் பின் நம்பர், கடவுச்சொல், ஓடிபி மற்றும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு எண் போன்றவற்றை யாரிடமும் பகிர வேண்டாம் எனவும் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.சமீப காலமாக ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தனது வாடிக்கையாளர்கள் உஷாரா இருக்க ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்த எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |