Categories
தேசிய செய்திகள்

இவர்களை மிஞ்ச யாரும் இல்லை…. ” இதில் மேற்குவங்கம் தான் முதலிடம்”…. வெளியான புள்ளி விவரம்…!!!!!!

நாட்டில் கடந்த வருடம் சமூக வலைத்தளங்களில் பொய் செய்திகள் பரப்பியதாக அதிக வழக்குகள் பதிவான மாநிலங்களில் மேற்குவங்கம் முதலிடத்தில் இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. மேற்கு வங்கத்தில் மொத்தம் 43 வழக்குகள் பதிவாகி இருக்கிறது. இதில் 28 வழக்குகள் கொல்கத்தாவில் மட்டும் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு கடந்த வருடம் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு ஆளும் திரிமுணால் காங்கிரஸ் இருக்கும் பாஜவிற்கும் இடையே கடுமையான போட்டி நிலவியுள்ளது. அப்போது திரிமுணால் காங்கிரஸ் பாஜக உட்பட அனைத்து கட்சிகளும் இணைய பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில் மக்களிடம் சென்றடைவதற்காக ஒழுக்கமற்ற பொய் பிரச்சாரங்களை அரசியல் கட்சிகள் மேற்கொண்டதே மேற்கு வங்காளத்தில் பொய் செய்திகள் அதிகம் பரவுவதற்கான காரணமாகும்.

இதனை தடுக்க மக்களிடம் போதிய விழிப்புணர்வு தேவை என ஜாதவ்ப்பூர் பல்கலைக்கழகத்தின் ஊடகவியல் தலைவர் சாத்தோபாத்யாய கூறியுள்ளார். இந்த நிலையில் மேற்கு வங்கத்தை தொடர்ந்து தெலுங்கானாவில் 34 வழக்குகளும், உத்தரப்பிரதேசத்தில் 24 வழக்குகளும், அதிகபட்சமாக பதிவாகி இருக்கிறது. மேலும் நாடு முழுவதும் பதிவான 129 வழக்குகளில் மேற்கு வங்காளத்தில் மட்டும் 24 வழக்குகள் இருக்கிறது. மேற்கு வங்கத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு பின் தான் பொய் செய்திகள் அதிகரித்திருப்பதாக திரிமுணால் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு சமூக வலைத்தளங்களை வாங்க முற்படுகிறது என திரிமுணால் காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் தீபக்ஷு பட்டாச்சாரியா குற்றம் சாட்டியுள்ளார். இது பற்றி பாஜக செய்து தொடர்பாளர் உஜ்வால் பாரீக் பேசும்போது, கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக நேர்மறையான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது. பொய் செய்திகள் அதிகரிப்பிற்கு திரிமுணால் காங்கிரசை காரணம் என தெரிவித்துள்ளார். இருப்பினும் மேற்கு வங்கத்தின் இந்த நிலைக்கு திரிமுணால் பாஜகவும் தான் காரணம் என மார்க்சிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் சுஜன் சக்கரவர்த்தி குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |