நித்தியானந்தா இலங்கையில், அடைக்கலம் தருமாறு கோரி அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு கடிதம் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நித்தியானந்தா என்ற சாமியார் மீது பல புகார்கள் தெரிவிக்கப்பட்டதால், கைலாசா என்று தனக்கென்று தனியாக ஒரு ராஜ்ஜியம் நடத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதால் மருத்துவ சிகிச்சைக்காக அடைக்கலம் தாருங்கள் என்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு கோரிக்கை வைத்து கடிதம் அனுப்பியிருக்கிறார்.
இது குறித்து, அவர் அதிபருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, எனக்கு உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறது. எனவே, விரைவாக மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. சிகிச்சை மற்றும் மருந்துகளுக்கு தேவைப்படும் செலவை கைலாசசா ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.