விபத்து வழக்குகளில் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பேருந்துகளை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள உக்கரம் கிராமத்தில் கூழி தொழிலாளியான கருப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2004-ஆம் ஆண்டு அரசு பேருந்து மோதி விபத்தில் கருப்பன் படுகாயம் அடைந்தார். இது தொடர்பான வழக்கை விசாரித்த கோபி சார்பு நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் 4,71,982 ரூபாய் கருப்பனுக்கு நஷ்ட ஈடாக வழங்கும்படி அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டது. ஆனால் இதுவரை நஷ்ட ஈடு வழங்கவில்லை. இதே போல் கடந்த 2011-ஆம் ஆண்டு கோத்தகிரி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த சிவகுமார் மீது அரசு பேருந்து மோதியதால் அவரது கால் துண்டானது.
இந்த வழக்கினை விசாரித்த கோபியில் இருக்கும் 3-வது மாவட்ட மற்றும் கூடுதல் அமர்வு நீதிமன்றம் சிவகுமாருக்கு 8,93,591 ரூபாய் இழப்பீடு வழங்குமாறு அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டது. ஆனால் இதுவரை நஷ்ட ஈடு வழங்கப்படவில்லை. எனவே நீதிபதி அரசு பேருந்துகளை ஜப்தி செய்யும்படி அதிரடியாக உத்தரவிட்டார். அந்த உத்தரவின் படி நீதிமன்ற ஊழியர்கள் பேருந்துகளை ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.