பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மூலமாக மாதம் தோறும் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு எதிர் பாராத விதமாக பல்வேறு சலுகைகள் கிடைக்கப்போகிறது. இதன் மூலம் ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கவர்ச்சியான வட்டி விகிதங்கள், வரிசலுகை போன்றவை கிடைக்கும் மற்றும் ஊழியர் ஒருவர் ஓய்வு பெறும் பொழுது அவருக்கு 12 இலக்க எண் ஒன்று வழங்கப்படுகின்றது. அந்த எண்னை பயன்படுத்தி ஊழியர்கள் அவர்களது ஓய்வூதியம் தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். மேலும் இபிஎஸ் சந்தாதாரர்கள் இந்த பிபிஓவை பயன்படுத்தி இ பி எஃப் இணையதளத்தில் ஓய்வூதிய நிலையை சரிபார்த்துக் கொள்ளலாம். அதேநேரம் இந்த 12 இலக்க பிபிஓ ஆனது அனைவருக்கும் பொதுவானது அல்ல. ஒவ்வொரு ஓய்வூதியதாரர் அல்லது குடும்ப ஓய்வூதியம் பெறுவர் என ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வழங்கப்பட்டு வருகிறது.
இது அவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் இந்த ஓய்வூதியதாரர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினர்கள் இந்த 12 இலக்கங்களை பயன்படுத்தி புகார் பதிவு செய்து கொள்ளலாம். தற்போது ஓய்வூதிய நிலையை எவ்வாறு சரி பார்க்கலாம் என்பதை இங்கே பார்ப்போம். இதனை செய்ய முதலில் epfindia.gov.inக்குள் லாகின் செய்து கொள்ளவும் அதன் பின் அதில் உள்ள பென்சனல் போர்டல் என்பதை கிளிக் செய்யவும். தற்போது அந்த பென்சனர் போர்டலில் வெல்கம் டு என்கின்ற ஆப்ஷன்க்கு நீங்கள் திருப்பி விடப்படுவீர்கள். அதன் பிறகு நோ யுவர் பிபிஓ நம்பர் என்பதை கிளிக் செய்யவும். அதன் பிறகு உங்கள் வங்கி கணக்கு எண் அல்லது பிஎப் என்னை உள்ளிடவும்.
தற்போது உங்களுக்கு பிபிஓ கிடைக்கும் அதன் பிறகு நீங்கள் ஓய்வூதியத்தின் நிலையை எளிதாக சரிபார்த்துக் கொள்ள முடியும்.மேலும் ஓய்வூதிய நிலையை சரிபார்க்க epfindia.gov.in குள் லாகின் செய்து பென்சனல் போர்ட்டர் ஆன்லைன் சர்வீஸை கிளிக் செய்து பென்சனர்ஸ் வெல்கம் போர்டல் செல்ல வேண்டும் தற்போது திரையில் தோன்றும் புதிய பக்கத்தில் வலது பக்கத்தில் உள்ள நோ யுவர் பென்ஷன் ஸ்டேட்டஸ் என்பதை கிளிக் செய்து கொள்ளவும். அதன் பின் அலுவலகம் அலுவலக ஐடி பிபிஓஎன் போன்றவற்றை தேர்ந்தெடுத்து ஓய்வூதியத்தின் நிலையை பெற ஸ்டேட்டஸ் ரிலிஸ்ட் என்பதை கிளிக் செய்ததுடன் ஓய்வூதியம் தொடர்பான முழுமையான தகவல் உங்களுக்கு காண்பிக்கப்படுகின்றது.