Categories
சினிமா

சிம்பு படத்திற்கு அரசு விடுமுறை?…. முதல்வர் எடுக்கும் முடிவு என்ன?…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இத்திரைபடத்தில் நடிகை சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்து இருக்கிறார். அத்துடன் ராதிகா சரத்குமார், ஏஞ்சலினா ஆபிரகாம், நீரஜ் மாதவ் உட்பட பலர் நடித்துள்ளனர். “வெந்து தணிந்தது காடு” படம் வரும் வரும் 15ம் தேதி வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியது.

இந்நிலையில் இந்த படம் வெளியாகும் தினமான செப்டம்பர் 15ம் தேதி அரசு விடுமுறை வழங்க வேண்டும் என நடிகரும் சிம்புவின் ரசிகருமான கூல் சுரேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக கூல் சுரேஷ் கூறியதாவது “தமிழக முதலமைச்சருக்கு ஒரு சிறிய வேண்டுகோள். வரும் 15-ம் தேதியன்று ரெட் ஜெயன்ட் வெளியிடும் சிம்பு நடித்துள்ள “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் உலகம் முழுதும் வெளியாகிறது. ஆகவே அன்று மட்டும் அரசு விடுமுறை அளிக்கவேண்டும் என அனைத்து சிம்பு ரசிகர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |