நார்த் கரோலினா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பதினாறு குழந்தைகள் பெற்றெடுத்த நிலையில் இது தொடர்பான சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார்.
நார்த் கரோலினா பகுதியை சேர்ந்தவர் கரோல்ஸ். இவர் மனைவியின் பெயர் பேட்டி ஹெர்னஸா. இந்த தம்பதியினர் இதுவரை 16 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். இந்த 16 குழந்தைகளுக்கும் ஒரு சிறப்பம்சம் உள்ளது. அது என்ன என்றால் எல்லா குழந்தைகளுக்கும் சி என்ற எழுத்தை வைத்து மட்டுமே பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏனெனில் அவரது தந்தையின் பெயர் சி என்ற தொடரில் வருவதால் குழந்தைகளுக்கும் அவ்வாறு பெயர் சுற்றியுள்ளனர். இதுவரை 16 குழந்தைகளில் ஆறு ஆண் குழந்தைகளுக்கும், 10 பெண் குழந்தைகளுக்கும் இப்படிதான் பெயர் வைத்துள்ளனர். இதில் மூன்று இரட்டை குழந்தைகள் அடங்கும்.
தனது திருமண வாழ்வில் மொத்தம் 14 ஆண்டுகள் பேட்டி கர்ப்பமாக இருந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது குழந்தை பிறந்து 13 வாரங்கள் ஆகியுள்ள நிலையில் மீண்டும் நான் கர்ப்பம் அடைந்துள்ளேன். நான் 14 ஆண்டுகள் கர்ப்பமாக இருந்துள்ளேன். எங்களின் 17 வது குழந்தையை பெற்றெடுக்க போகிறேன். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது. எனக்கு மொத்தம் 20 குழந்தைகள் வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதுவரை குழந்தை பெற்றெடுப்பேன் என்று தெரிவித்தார். மேலும் இந்த தம்பதியின் வீட்டில் மொத்தம் ஐந்து படுக்கை அறைகள் உள்ளது. ஒரு வாரத்திற்கு தங்களின் குழந்தைகளை பராமரித்துக்கொள்ள மட்டும் 72 ஆயிரம் ரூபாய் வரை செலவழிப்பதாக தெரிவித்துள்ளனர்.