Categories
அரசியல் மாநில செய்திகள்

கோபாலபுரத்தில் மாவு ஆட்டுறீங்களா ? கடுமையாக விமர்சித்த சி.வி சண்முகம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், 15 மாத கால திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கஞ்சா என்று மாறி இருப்பதற்கு காரணம் சட்டம் ஒழுங்கு சீரழிந்து இருக்கிறது என்பதற்கு அதிமுக அலுவகத்தில் நடந்த தாக்குதலே உதாரணம். அந்த அளவிற்கு நிர்வாகம் சீர்கெட்டு இருக்கிறது.

காவல்துறை தன் கடமையை செய்ய தவறி இருக்கிறது, நாங்கள் காவல்துறையை கேட்டு கேட்கிறோம், காவல்துறை தலைவரை கேட்கிறோம் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ?நாங்கள் ஏற்கனவே சொன்னோம், தமிழகத்தினுடைய காவல்துறை திமுகவினுடைய தொண்டர் படையாக மாறிவிட்டது என்று…

ஆனால் இப்போது அவர்கள் முழுக்க முழுக்க திமுகவினுடைய உறுப்பினர்களாக, மாவட்ட செயலாளர்களாக, காவல்துறை தலைவர் தன்னுடைய கடமையை மறந்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை அந்த அலுவலகத்திற்கு விசாரணைக்கு வரவில்லை.சம்பவ இடத்தை பார்க்கவில்லை. ஆக இதை வன்மையாக கண்டிக்கத்தக்கது, இன்னும் சொல்லப்போனால் இந்த குற்றத்திற்கு, குற்றத்தை விசாரிக்காமல் இருப்பதே மிகப்பெரிய குற்றம்.

அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் காவல்துறை என்ன செய்து கொண்டு இருக்கின்றது. கோபாலபுரத்திலே மாவாட்டி கொண்டிருக்கிறார்களா? என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இதுவரை நாங்கள் குற்ற சம்பவ இடத்தில் எந்தவித பாதிப்பு ஏற்படக்கூடாது என்று அலுவலகத்திற்கு செல்லாமல் இருக்கிறோம். ஆனால் காவல்துறை தன் கடமையை செய்ய மறுக்கிறது.

இதிலே உடந்தையாக இருக்கின்ற துணை போய்க் கொண்டிருக்கின்ற தமிழகத்தினுடைய காவல்துறை, குறிப்பாக காவல்துறை தலைவர்,  சிபிசிஐடியுனுடைய பொறுப்பை ஏற்று இருக்கின்ற ஏடிஜிபி, ஐஜி இதுக்கு முழுமையான பொறுப்பு ஏற்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

Categories

Tech |