சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் மாற்று பாதையில் இயக்கப்பட உள்ளது.
விழுப்புரம்-தாளநல்லூர் ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அந்த பாதை வழியாக செல்லும் ரயில்களின் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மாவட்டத்தில் இருந்து மதுரை வழியாக குருவாயூர் வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்(வ.எண்.16127) வருகிற 7-ஆம் தேதி மட்டும் விழுப்புரத்தில் இருந்து விருதாச்சலத்திற்கு பதிலாக மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளது. அதாவது விழுப்புரத்தில் இருந்து திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழியாக திருச்சி சென்று அங்கிருந்து வழக்கமான பாதையில் குருவாயூர் வரை இயக்கப்பட உள்ளது.