Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மூதாட்டியை காப்பாற்ற முயன்ற வாலிபர்கள்…. பின் நடந்த சம்பவம்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

கிணற்றுக்குள் தத்தளித்து கொண்டிருந்த மூதாட்டி உட்பட 3 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெத்தநாயக்கனூர் மேட்டுக்காடு பகுதியில் இருக்கும் தோட்டத்தில் சின்னமணி என்பவர் விவசாய பணிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் தோட்டத்து கிணற்றிற்கு அருகில் இருந்த பம்பு செட்டில் மின் மோட்டாரை இயக்க முயன்றபோது சின்னமணி எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தார். அவரது சத்தம் கேட்டு அதே பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் மூதாட்டியை மீட்பதற்காக கிணற்றுக்குள் குதித்து கயிற்றைப் பிடித்து மேலே வர முயன்றனர். ஆனால் அவர்களால் மேலே வர இயலவில்லை.

இதனால் மூன்று பேரும் கிணற்றுக்குள் தத்தளித்துக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி மூன்று பேரையும் பத்திரமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |