நடிகை ஐஸ்வர்யாராய் போல் உள்ள ஆஷிதாசிங் சமூகவலைதளத்தில் பிரபலமானவர் ஆவார். அவரது கண்கள் முதல் மூக்கு மற்றும் உதடுகள் வரை அனைத்தும் ஐஸ்வர்யாராய் போலவே இருக்கிறது. அவருக்கு லட்சக்கணக்கான பாலோவர்கள் இருக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் ஆஷிதாவுக்கு 2,50,000 பாலோவர்கள் இருக்கின்றனர். இதற்கிடையில் அவர் ரீல் வீடியோக்களை உருவாக்கி வெளியிட்டு வருகிறார். அவரது இன்ஸ்டாகிராமில் 90-கள் மற்றும் 2000-களின் ஹிந்திபாடல்கள், உரையாடல்கள் மற்றும் பலவற்றின் ரீல் வீடியோக்கள் நிறைந்துள்ளது. ஆஷிதா தன் சமீபத்திய இன்ஸ்டாகிராம் வீடியோவில் குச் குச் ஹோதா ஹை திரைப்படத்திலிருந்து கஜோலின் வரிகளில் ஒன்றை பாடி இருக்கிறார்.
ஆஷிதா, ஐஸ்வர்யாராய் பச்சனைப் போன்று அழகாகஇருக்க விரும்புகிறார். “உலக அழகி” பட்டம் வென்ற பின், ஐஸ்வர்யா ராய் “இருவர்” திரைப்படம் வாயிலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய படங்களிலும் நடித்தார். அதன்பின் இந்தி சினிமாவில் நடிக்கத் துவங்கி, அங்கு உச்ச நட்சத்திரமாக ஜொலித்தார். அத்துடன் இந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் மாறினார். பின்னர் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். ஐஸ்வர்யாராய், அபிஷேக் பச்சனை விட 5 வயது பெரியவர். ஐஸ்வர்யாராய் நடிப்பில் தமிழில் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.