Categories
மாநில செய்திகள்

இதெல்லாம் செய்ய கூடாது….. “தமிழகம் முழுவதும் புதிய கட்டுப்பாடு”….. அரசு எச்சரிக்கை….!!!

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி திருவிழா விமர்சனையாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழாவில் மூன்று நாட்கள் தொடர்ந்து விநாயகர் சிலை வைக்கப்பட்டு அதனை ஆறுகள், குளம், கடல் போன்றவற்றில் கரைப்பது வழக்கம். அப்படி ஊர்வலமாக கொண்டு செல்லும் போது பட்டாசு வெடித்து, மேல தாளங்கள் வாசிக்க, ஆட்டம் பாட்டத்துடன் செல்வார்கள். இதனால் சில இடங்களில் வன்முறை வெடிக்கும். இதை தவிர்க்க தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதாவது தமிழகத்தில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது பட்டாசுகள் வெடிக்க கூடாது என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மதவாத வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையிலோ, பிற மதத்தினர் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலோ முழக்கம் விடக்கூடாது. அனுமதி வழங்கிய பாதைகளில் மட்டுமே சென்று சிலைகளை கரைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக காவல்துறை. மேலும் விநாயகர் சிலை கரைப்பின் போது பிரச்சனையில் ஈடுபடுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

Categories

Tech |