Categories
மாநில செய்திகள்

புதிய மின் கட்டணம் எப்போது நடைமுறைக்கு வரும்?…… அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன முக்கிய பதில்….!!!!

புதிய மின் கட்டணம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்துள்ளார்.

மின்வாரிய அதிகாரிகளின் ஆய்வுக்கூட்டம் சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார். ஆய்வுக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது “பருவமலையின் போது ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சரி செய்து, சீரான மின்விநியோகம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு தமிழக மின்வாரியம் 67 கோடி நிலுவைத் தொகை பாக்கி வைத்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தமிழக அரசு விடுத்த தொகை குறித்த விவரங்கள் அதில் தெரிவிக்கப்படவில்லை. இதுவரை நாம் நிலுவைத் தொகை எதையும் வைக்கவில்லை. இந்த 67 கோடி நிலுவைத் தொகைக்காக நமக்கு வழங்கக்கூடிய மின்சாரத்தை கூட பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மின்வாரியத்தில் இருக்கும் காலி பணியிடங்கள் குறித்த விவரங்களை கேட்டுள்ளோம். அந்த விவரங்கள் வந்தவுடன் டிஎன்பிஎஸ்சி மூலமாக பணியிடங்கள் நிரப்பப்படும்.

இனிமேல் மின்கட்டண உயர்வு என்பது எந்த தேதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும் என்பதை ஒழுங்குமுறை ஆணையம் தான் மின்வாரியத்துக்கு உத்தரவு பிறப்பிக்கும், அந்த உத்தரவுக்காக மின்வாரியம் காத்திருக்கின்றது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை பொறுத்தவரையில் நிலை கட்டணங்கள் அதிகமாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். அதை கருத்தில் கொண்டு அதை மட்டும் குறைப்பதற்கு பரிசீலினை செய்துள்ளோம். வேறு எதில் குறைக்க வேண்டும் என்பது பற்றியும் அதில் தெரிவித்து ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அனுப்பி உள்ளோம். ஒழுங்குமுறை ஆணையம் எப்போது நடைமுறைப்படுத்த கூறுகிறதோ அப்போதிலிருந்து புதிய கட்டணம் நடைமுறைக்கு வரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |